ஜெர்மனியின் போச்சும் நகரிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25, 27 வயதுடைய 2 இளம்பெண்கள், 26 வயதான ஆண் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 3 பேரும் இந்தியர்கள் என அங்கிருந்து வரும் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தீ விபத்தை ஏற்படுத்தி கொலை செய் திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் ரொமேனியாவைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
