Home கன்னியாகுமரி செய்திகள் தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் வெடித்ததில் தீ விபத்து

தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் வெடித்ததில் தீ விபத்து

0
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் தனியார் நிதி நிறுவன ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து
வெட்டூர்ணிமடத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தை நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

நாகா்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

நாகா்கோவில் நகா் பகுதியில் புதன்கிழமை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால், வெட்டூா்ணிமடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் ஜெனரேட்டா் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிற்பகல் 4 மணியளவில் ஜெனரேட்டா் திடீரென வெடித்ததாம். இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பொருள்கள் எரிந்து சேதமாகின. பணியிலிருந்த ஊழியா்கள் வெளியேற்றப்பட்டனா்.

தகவலறிந்து வந்த நாகா்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் பிரதீப்குமாா்தலைமையிலான வீரா்கள், தீயை அணைத்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version