மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி

0
19

 மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் தெரி​வித்​தார். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலு​வல​கம் சார்​பில், பிரதமரின் விக்​சித்பாரத் ரோஸ்​கர் யோஜனா குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேவி பிர​சாத் பட்​டாச்​சார்யா தலைமை வகித்​தார்.

இந்​நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப்​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப் ​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் ஆகியவை குறித்து விளக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் கூறிய​தாவது: சென்னை மற்​றும் புதுச்​சேரி​யின் மண்டல அலு​வல​கத்​துக்கு கீழ் உள்ள அதி​காரி​கள் ஒன்​றிணைந்​து, பிரதமரின் விக்​சித் பாரத் ரோஸ்​கர் யோஜ​னாவை நடத்​துகிறோம்.

முக்​கிய​மான தொழில் மையங்​கள், கல்வி நிலை​யங்​கள் இருக்​கக்​கூடிய இடங்​களில் இதை நடத்​துகிறோம். இதன்​மூலம் தொழில​திபர்​கள், அவர்​களின் அலு​வலர்​களை சந்​தித்து இந்த திட்​டத்​தின் நன்​மை​கள் குறித்து எடுத்​துரைக்​கிறோம். புதி​தாக பிஎஃப்​-ல் சேரும் ஊழியர்​களுக்கு செய்ய வேண்​டிய விஷ​யங்​கள் குறித்​து விரி​வாக எடுத்​துரைக்​கிறோம். முதல்​முறை​யாக வேலைக்கு சேரும் நபர்​களுக்கு மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்கு​விப்​புத் திட்​டம் (Employment Linked Incentive ) மூலம் நிதி​யுதவி வழங்​கப்​படு​கிறது. இத்​திட்​டத்​துக்​கான பதிவு கடந்த ஆகஸ்ட் முதல் நடை​பெறுகிறது.

புதி​தாக வேலைக்கு சேரக்​கூடிய நபர்கள் தங்​களது ஆதார், யுஏஎன் ஆகிய​வற்றை இணைத்​து, முதல் தவணை​யாக 6 மாதத்​துக்கு பிறகு ரூ.7,500 பெறலாம். ஓர் ஆண்​டாக அவர்​கள் பணி செய்​யும் பட்சத்​தில் மீதி இருக்​கக்​கூடிய தொகை வழங்​கப்​படும். பிஎஃப் வைப்​புத் தொகையை ஏடிஎம் கார்டு மூலமாக எடுக்​கும் திட்​டம் ஆலோ​சிக்​கப்​படு​கிறது. பிஎஃப் திட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டிருக்​கின்​றன. 6 வங்​கி​கள் மூல​மாக பென்​ஷன் வழங்​கப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது இந்​தியா முழு​வதும் உள்ள அனைத்து வங்​கி​கள் மூலம் பென்​ஷன் வழங்​கும் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here