மகளுக்கு காதொலி கருவி கேட்ட தந்தை: உடனே நிறைவேற்றிய முதல்வர்

0
131

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்றார். அப்போது முதல்வரிடம் ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். ஒருவர் முதல்வரிடம் பேச முற்பட்டார். ‘அவரிடம் என்ன வேண்டும்?’ என்று முதல்வர் கேட்டார்.

அதற்கு அவர், ‘எனது பெயர் சுரேஷ். நான் திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவன். எனது மகள் 6-வது படிக்கிறாள். அவளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை உட்பட பல இடங்களில் காதொலி கருவி வேண்டும் என கேட்டோம். அதற்கு 500 பேருக்குத் தர வேண்டியுள்ளது, காத்திருக்கும்படி தெரிவித்தனர். விரைவில் காதொலி கருவி கிடைத்தால் மகள் படிக்க உதவியாக இருக்கும்’ என தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். அதன்படி, நேற்று மாலையிலேயே சுரேஷ் மகளுக்கு நவீன காதொலி கருவி வழங்கப்பட்டது. காலையில் கோரிக்கை வைத்து மாலையிலேயே அதை நிறைவேற்றியதற்காக சுரேஷும் அவரது மகளும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here