கட்சிரோலி பகுதியில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி அதிக லாபம் தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

0
24

மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்​சலைட் ஆதிக்​கம் மிகுந்து காணப்​பட்​டது. இங்​குள்ள விவ​சா​யிகள் தொடர்ந்து அச்​சத்​தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறு​வது அவர்​களுக்கு கடின​மாக இருந்​தது. இந்​நிலை​யில் மத்​திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரண​மாக இப்​பகுதி இடது​சாரி தீவிர​வாதத்​தில் இருந்து மீண்டு வந்​துள்​ளது.

இது​வரை கட்​சிரோலி​ ​பகு​திக்கு அறி​முகமில்​லாத ஸ்ட்​ராபெர்​ரி​யின் விளைச்​சல் இந்த ஆண்டு அதிக லாபத்தை தந்​துள்​ள​தால் விவ​சா​யிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். கட்​சிரோலி​யில் உள்ள முல்​சே​ரா, மலைப்​பாங்​கான நிலப்பரப்பை கொண்​டுள்​ளது. இது, ஸ்ட்​ராபெர்ரி விளைச்சலுக்​குப் பெயர் பெற்ற மகா​ராஷ்டி​ரா​வின் புகழ்பெற்ற மலை​வாசஸ்​தல​மான மகாபலேஷ்வர் காலநிலையை கொண்​டுள்​ளது.

நக்​சலைட் ஆதிக்​கத்​தில் இருந்து மீண்​டும் வரும் கட்சிரோலி விவ​சா​யிகளுக்கு உதவுவதற்​காக மாவட்ட வேளாண்மை துறை​யால் ஒரு பரிசோதனை முயற்​சி​யாக இங்கு ஸ்ட்​ராபெர்ரி சாகுபடி தொடங்​கப்​பட்​டது. இன்று அது லாபகர​மான பயி​ராக உரு​வெடுத்​துள்​ளது. இதுகுறித்து தாலுகா வேளாண்மை அதி​காரி விகாஸ் பாட் டீல் கூறுகை​யில், “கடந்த 2019-ல் எங்​களுக்கு இந்த யோசனை முதலில் தோன்​றியது.

இங்கு வெப்​பநிலை சற்று கூடு​தலாக இருந்​த​தால் வெப்​பத்தை தாங்​கக் கூடிய வகையை தேர்ந்​தெடுத்​தோம். விவசா​யிகளை சோதனை அடிப்​படை​யில் ஸ்ட்​ராபெர்ரி பயி​ரிட ஊக்​கு​வித்​தோம். இதில் இங்கு ஸ்ட்​ராபெர்ரி பயிரிட முடி​யும் என்​பதை உணர்ந்​தோம். மகா​ராஷ்டிர அரசின் ஆதர​வால் நாங்​கள் நிலை​மையை மாற்​றி​யுள்​ளோம், இப்​பகுதி விவ​சா​யிகள் ஒன்று முதல் ஒன்​றரை லட்சம் ரூபாய் வரை சம்​பா​திக்​கிறார்​கள். மற்ற பயிர்களுடன் ஒப்​பிடும்​போது இது மிக​வும் அதி​கம்” என்றார்.

மாற்​றத்தை ஏற்​படுத்​தும்

கட்​சிரோலி​யில் அமைதி மற்​றும் இயல்பு நிலை திரும்​பிய தருண​மும் விவ​சா​யிகளுக்கு ஸ்ட்​ராபெர்ரி லாப​மும் ஒருசேர நிகழ்ந்​துள்​ளது. இது ஒரு மாற்றத்தை ஏற்​படுத்​தும் தருண​மாக பார்க்​கப்​படு​கிறது. இங்​குள்ள விவ​சா​யிகள் தங்​கள் எதிர்​காலத்தை தாங்​களே வகுத்​துக் கொள்​கின்​றனர். அரசு நலத்​திட்​டங்​கள் பயனாளி​களை சென்​றடைந்து கட்​சிரோலி செழிக்​க வேண்​டும்​ என்​ப​தில்​ மாநில அரசும்​ உறு​தி​யாக உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here