நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை

0
9

கர்​நாடக மாநிலம் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள மூடனஹள்​ளியை சேர்ந்​தவர் மஞ்சே கவுடா (55).

இவருக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் நிலம் கர்​நாடக வனத்​துறை இடத்​துக்கு அரு​கில் இருந்​தது. இதனால் வனத்​துறை அந்த நிலத்தை 3 ஆண்​டு​களுக்கு முன்பு கையகப்​படுத்​தி​யது. தனது நிலத்​துக்கு உரிய இழப்​பீடை உடனடி​யாக வழங்​கு​மாறு மண்​டியா மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தி​ல் மஞ்சே கவுடா மனு அளித்​தார். ஆனால் அரசு இழப்​பீடு வழங்​காமல் காலம் தாழ்த்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில் மஞ்சே கவுடா நேற்று முன் தினம் மண்​டியா மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தின் முன்​பு தன் உடல் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்​டார். இதனை கண்ட காவல் துறை​யினர் தீயை அணைத்​து, உடனடி​யாக ஆம்​புலன்ஸ் மூலம் ம‌ருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இருப்​பினும் மஞ்சே கவுடா சிகிச்சை பலனின்றி உயி​ரிழ‌ந்​தார்.

இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கர்​நாடக வனத்​துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே உத்தர விட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here