ஜூனியர் என்டிஆரை பார்க்க குவிந்த ரசிகர்களால் பரபரப்பு

0
16

பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்​டிஆர், ‘ஆர்​ஆர்​ஆர்’ படத்​துக்​குப் பிறகு பான் இந்​தியா நடிக​ராக மாறி​விட்​டார். இப்​போது பிர​சாந்த் நீல் இயக்​கும் ‘டி​ராகன்’ படத்​தில் நடித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் இவர் பெங்​களூரு மகாதேவபு​ரா​வில் கட்டப்பட்​டுள்ள கிம்ஸ் மருத்​து​வ​மனையைத் திறந்துவைக்க ஞாயிற்​றுக்​கிழமை வந்​தார். அவரைப்பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்​கள் கூடினர். அவர்​கள் மருத்​து​வ​மனைக்​குள்​ளும் புகுந்​தனர். இதனால் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

பாது​காவலர்​கள், அவர்​களிடம் இருந்து ஜூனியர் என்டிஆரை மீட்டு அழைத்​துச் சென்​றனர். ரசிகர்​களைக் கட்​டுப் ​படுத்த போலீ​ஸார் முயன்​றனர். எல்லை மீறிப் போன​தால் லேசான தடியடி நடத்​திக் கூட்​டத்​தைக் கலைத்தனர். ரசிகர்​கள் கூட்​டத்​தால் மருத்​து​வ​மனை​யின் எஸ்கலேட்டர்​ சேதமடைந்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here