Home சினிமா செய்திகள் பிரபல மலையாள நடிகர் மேகநாதன் காலமானார்

பிரபல மலையாள நடிகர் மேகநாதன் காலமானார்

0

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் மேகநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 60.

தேசிய விருது பெற்ற மூத்த மலையாள நடிகர் பாலன் கே நாயரின் மகன் மேகநாதன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அஸ்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக ‘பஞ்சாக்னி’, ‘செங்கோல்’, ‘மலப்புரம்’, ‘ஆக்ஷன் பிஜூ’, ‘விக்ருதி’, ‘ஒன்’, ‘கூமன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.

இந்நிலையில், நுரையீரல் தொடர்பான பிரச்சினை காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகத்தின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version