மும்பையில் ரூ.14 கோடியில் ஏழுமலையான் கோயில்: தேவஸ்தான கூட்டத்தில் தீர்மானம்

0
12

​மும்பையில் உள்ள பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

தேவஸ்​தான தலை​வர் பிஆர் நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

இதுகுறித்து அறங்​காவலர் பிஆர் நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி அனில் குமார் சிங்​கால் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேவஸ்​தானத்​தின் கோயில்​களுக்​காக சித்​தூர் மாவட்​டம், பலமனேர் அருகே 100 ஏக்​கர் பரப்​பள​வில் கொடிமரங்​கள் மற்​றும் தேர்​களுக்​காக தோப்பு அமைக்​கப்​படும்.

திருப்​பதி ஸ்ரீபத்​மாவதி சிறு​வர் இதய சிகிச்சை மருத்​து​வ​மனையை நவீனப்​படுத்த கூடு​தலாக ரூ.48 கோடி நிதி ஒதுக்​கப்​படும். மும்பை பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்​டப்​படும். இதற்​கான பணி​கள் விரை​வில் தொடங்​கும். பக்​தர்​களின் வசதிக்​காக 20 ஏக்​கரில் திருப்​ப​தி​யில் ஒருங்​கிணைந்த நகரம் உரு​வாக்​கப்​படும்.

தலக்​கோ​னா​வில் உள்ள சித்​தேஸ்​வரர் கோயில் மராமத்​துக்​காக 2-ம் கட்​ட​மாக ரூ.14.1 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​படு​கிறது. தேவஸ்​தான பொறி​யியல் பிரி​வில் காலி​யாக உள்ள 60 பணி இடங்​கள் விரை​வில் நிரப்​பப்​படும்.

இதே​போன்று பிர​சாதம் தயாரிக்​கும் மடப்​பள்​ளிக்கு கூடு​தலா 18 கண்​காணிப்​பாளர்​களை நியமனம் செய்ய ஆந்​திர அரசிடம் ஒப்​புதல் பெற​வும் தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது. திரு​மலை மற்​றும் மலைப்​பாதை​யில் உள்ள புராதன கோயில்​களை பராமரிக்க குழு அமைக்க தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here