ஈத்தாமொழி: வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி மாயம்

0
296

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த புதூரை சேர்ந்தவர் குமார், கொத்தனார். இவருடைய மகள் வினிஷா (வயது 17). இவர் கோணத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி. காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய வினிஷாவை நேற்று காலையில் பார்த்த போது காணவில்லை. அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத் தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து குமார் ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வினிஷாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here