3 வருடத்​துக்கு பிறகு வெளிநாட்டில் தொடரை வென்றது இங்கிலாந்து

0
53

இலங்கை – இங்​கிலாந்து அணி​கள் இடையிலான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கொழும்​பில் நேற்​று​முன்​தினம் நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 50 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 357 ரன்​கள் குவித்​ததுகேப்​டன் ஹாரி புரூக் 66 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 11 பவுண்டரிகளுடன் 136 ரன்​களும், ஜோ ரூட் 108 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 111 ரன்​களும் விளாசினர். ஜேக்​கப் பெத்​தேல் 72 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் சேர்த்​தார். 358 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணி 46.4 ஓவர் களில் 304 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​சமா பவன் ரத்​னாயகே 115 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 12 பவுண்​டரி​களு​டன் 121 ரன்​கள் விளாசி​னார். பதும் நிசங்கா 50, கமில் மிஷாரா 22, துனித் வெல்​லாலகே 22 ரன்​கள் சேர்த்தனர். இங்​கிலாந்து அணி தரப்​பில் ஜேமி ஓவர்​டன், லியாம் டாவ்சன், வில் ஜேக்ஸ் 2, ஆதில் ரஷித் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரை 2-1 என்ற கணக்​கில் கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. ஆட்ட நாயக​னாக ஹாரி புரூக் தேர்​வானர். தொடர் நாயகன் விருதை ஜோ ரூட் வென்​றார். அவர், இந்தத் தொடரில் 247 ரன்​களை​யும், 2 விக்​கெட்​களை​யும் கைப்பற்றி​யிருந்​தார்.

இந்த தோல்​வி​யின் மூலம் இலங்கை அணி சொந்த மண்ணில் 5 வருடங்​களுக்​குப் பிறகு ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை இழந்​துள்​ளது. அதேவேளை​யில் வெளிநாட்​டில் 3 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் ஒருநாள் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here