Home விளையாட்டு செய்திகள் ​முதல்​ டெஸ்​ட் போட்டியில் பாகிஸ்தானை 171 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து

​முதல்​ டெஸ்​ட் போட்டியில் பாகிஸ்தானை 171 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து

0

 இங்​கிலாந்​து – பாகிஸ்​தான்​ அணி​கள்​ இடையி​லான முதல்​ டெஸ்ட்​ போட்​டி லீட்​ஸ்​ மைதானத்​தில்​ நேற்​று தொடங்​கியது.

முதலில்​ பேட்​ செய்​த பாகிஸ்​தான்​ அணி 48.1 ஓவர்​களில் 171 ரன்​களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸான்​ அவாய்​ஸ்​ 0, இமாம்​ உல்​ஹக்​ 42, ஷான்​ மசூத்​ 5, அப்​துல்​லா ஷபிக்​ 61, சவுத்​ ஷகீல்​ 5, கேப்​டன்​ சல்​மான்​ ஆகா 21, உஸ்​மான்​ அலி 0, முகமது ரிஸ்​வான்​ 12, குர்ராம் ஷாஸாத் 14, முகமது அப்பாஸ் 2 ரன்​களில்​ ஆட்​ட​மிழந்​தனர்​. முகமது அலி ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்​கிலாந்​து அணி சார்​பில்​ ஆலி ராபின்​சன்​ 5, ஜோஷ் டங்க்​ 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தனர்​.

இதில் ஆலி ராபின்சன் 18 ஓவர்கள் வீசி 51 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவர் மூன்று மெய்டன் ஓவர்களை வீசி இருந்தார்.

தொடர்ந்து இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. பென் டக்கெட் 15, எமிலியோ 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜோர்டன் காக்ஸ் 23 மற்றும் கேப்டன் ஜோ ரூட் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி பாகிஸ்தானை காட்டிலும் வெறும் 59 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version