ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

0
11

 ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது.

விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​ விரோத பணப்பரி​மாற்​றம் நடை​பெற்​றது தெரிய​வந்​தது. இதனையடுத்​து, சுரேஷ் ரெய்​னா​வின் ரூ. 6.64 கோடி மதிப்​பிலான சொத்​துகளும் (மியூச்​சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத் துறை முடக்கி உள்​ளது.

இந்த விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக முன்​னாள் வீரர்​களான யுவ​ராஜ் சிங், ராபின் உத்​தப்பா மற்​றும் நடிகர்​கள் சோனு சூட், ஊர்​வசி ரவுதலா, மிமி சக்​ர​வர்த்தி (முன்​னாள் திரிணா​முல் காங்​கிரஸ் எம்​.பி.) மற்​றும் அங்​குஷ் ஹஸ்ரா (வங்​காள நடிகர்) ஆகியோரிடம் அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யிருந்​தது. இவர்​கள் மீதும் விரை​வில் நடவடிக்கை எடுக்​கப்​படக்​கூடும்​ என தெரி​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here