நடிகர் சல்மான்கானை தொடர்ந்து மேலும் பல பாலிவுட் பிரபலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ராஜ்பால் யாதவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதனை, விஷ்ணு என்பவர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அம்போலி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, நடன கலைஞர் ரெமோ டி செளசா, காமெடி நடிகர் கபில் சர்மா, ஸ்டாண்டப் அப் காமெடியன் சுகந்தி மிஸ்ரா ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் இந்த மிரட்டல் மின்னஞ்சல் “don99284@gmail.com” என்ற முகவரியின் மூலமாக பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














