Home தேசிய செய்திகள் சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை சிகிச்சை பலனின்றி இறந்தது

சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை சிகிச்சை பலனின்றி இறந்தது

0

கர்​நாடக மாநிலம் குடகில் யானை​களுக்கு இடையே ஏற்​பட்ட சண்​டை​யில் சிக்கி சென்​னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயி​ரிழந்த நிலை​யில் படு​கா​யம் அடைந்த மார்த்​தாண்டா யானை சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தது.

கர்​நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானை​கள் முகா​மில் நேற்று முன்​தினம் மார்த்​தாண்​டா, கஞ்​சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சண்டை ஏற்​பட்​டது. இதில் இரு யானைகளும் ஒன்​றையொன்று தாக்​கிக்​கொண்​ட​தில் காயமடைந்​த‌ன.

இந்த யானை​களுக்கு இடையே சிக்​கிய சென்​னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி (33) காயமடைந்து உயி​ரிழ‌ந்​தார். இந்த சம்​பவத்​தின்​ போது அரு​கி​லிருந்த அவரது கணவர் கையில் குழந்தையை வைத்​துக் ​கொண்​டு, மனை​வியை மீட்க போராடிய காட்​சி, இணை​யத்​தில் வைரலானது.

மடிக்​கேரி அரசு மருத்​து​வ​மனை​யில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜாய்​சி​யின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்​ன​தாக உயி​ரிழந்த ஜாய்​சி​யின் கண்களை தானம் செய்​தது நெகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், உயி​ரிழந்த ஜாய்​சி​யின் குடும்​பத்​துக்கு ரூ.20 லட்​சம் நிவாரண​மாக வழங்​கப்​படும் என கர்​நாடக அரசு சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

துபாரே யானை​கள் முகாமில் கஞ்​சன் யானை தாக்​கிய​தில் மார்த்தாண்டா யானைக்கு உள் மற்​றும் வெளிக் காயம் ஏற்பட்டது. மார்த்​தாண்டா யானை பாறை​களுக்கு நடு​வில் விழுந்த​தில் கழுத்து மற்​றும் தலைப்​ பகு​தி​யில் பலத்த காயம் ஏற்பட்​டது. அங்கிருந்து அதனை மீட்ட வனத்​துறை அதி​காரி​கள் மார்த்தாண்டா யானையை மடிக்​கேரி​யில் உள்ள கால்​நடை மருத்து​வ​மனைக்கு கொண்​டு​சென்று சிகிச்சை அளித்​தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மார்த்​தாண்டா யானை உயிரிழந்தது.

53 வயதான மார்த்​தாண்டா யானை 4500 கிலோ எடை கொண்​டது. 2014-ம் ஆண்டு ஹாசன் வனப்​பகு​தி​யில் இருந்து மீட்​கப்​பட்ட இந்த யானை, நன்கு பயிற்​று​விக்​கப்​பட்டு மைசூரு தசரா ஊர்வலத்துக்கு பயன்​படுத்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version