Home தேசிய செய்திகள் தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்: பிப்.4-ல் ஆணையம் ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்: பிப்.4-ல் ஆணையம் ஆலோசனை

0

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பிப்ரவரி 4 மற்றும் 5 தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விரிவான முறையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்துறை செயலர்கள் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version