பிஹார் வாக்காளர் பட்டியல் தவறை சுட்டிக்காட்ட தேர்தல் ஆணையம் ஒரு மாதம் அவகாசம்

0
118

 பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அம்​மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொண்​டது. 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்​பட்​ட​வர்​கள் தங்​கள் குடியுரிமையை நிரூபிக்க தேவை​யான ஆவணங்​களை அளிக்க வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் கூறியது சர்ச்​சையை ஏற்படுத்தி​யது.

இந்​நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் சமீபத்​தில் வெளி​யானது வரைவு வாக்​காளர் பட்​டியல் மட்​டுமே. என்​றாலும் இதனை இறு​திப் பட்​டியல் என்ற தோற்​றத்தை ஏற்​படுத்த சிலர் முயற்​சிக்​கின்​றனர்.

பெயரை​ தவறாக சேர்த்​தது அல்​லது நீக்​கியதை​ சுட்​டிக்​காட்ட ஆக. 1 முதல் செப்​. 1 வரை அவகாசம் உள்ள நிலை​யில் இப்​போது ஏன் இவ்​வளவு பெரிய பரபரப்பை ஏற்​படுத்​துகிறார்​கள் என்​பதை புரிந்து கொள்ள முடிய​வில்​லை. இவர்​கள் தங்​களின் 1.6 லட்​சம் பூத் முகவர்​களிடம் ஆட்​சேபனை அல்​லது கோரிக்கை ஆவணங்​களை ஆக. 1 முதல் செப். 1 வரை சமர்ப்​பிக்க ஏன் உத்​தர​விடக்​கூ​டாது? இவ்​வாறு தேர்​தல் ஆணையம் அறிக்​கை​யில்​ கூறி​யுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here