கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் காலமானார்: தமிழக முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

0
14

ஓய்​வு​பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், மூத்த கல்​வி​யாள​ரு​மான எஸ்​.எஸ்​.​ராஜகோ​பாலன் (95) வயது மூப்பு மற்​றும் உடல்​நலக்​குறைவு காரணா​மாக, சென்னை, கோடம்​பாக்​கத்​தில் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.

இந்​நிலை​யில், சிகிச்சை பலன் அளிக்​காமல் நேற்று முன்​தினம் கால​மா​னார். ராஜகோ​பாலனின் விருப்​பப்​படி அவரது உடல் மருத்​துவ ஆராய்ச்​சிக்​காக போரூர் ராமச்​சந்​திரா மருத்​து​வக் கல்​லூரி​யில் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது.

முன்​ன​தாக, அவரது உடலுக்கு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ. சண்​முகம், மத்​திய சென்னை மாவட்ட செய​லா​ளர் ஜி. செல்வா ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர்.

மறைந்த கல்வியாளர் ராஜகோபலான் கடந்த 1950-ம் ஆண்டு அரசு பள்​ளி​யில் ஆசிரிய​ராக சேர்ந்து 40 ஆண்டு கால பணிக்கு பிறகு, 1990-ல் தலைமை ஆசிரிய​ராக ஓய்வு பெற்​றார்.

தமிழகத்​தில் பள்​ளிக் ​கல்​வித் துறை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட பல்​வேறு சீர்​திருத்​தங்​களில் அவருக்கு முக்​கிய பங்கு உண்​டு. கருணாநிதி முதல்​வ​ராக இருந்​த ​போது நடை​முறைப்​படுத்​தப்​பட்ட சமச்​சீர்க் கல்விக்​கான குழு​வின் உறுப்​பின​ராக இருந்து பல ஆக்​கப்​பூர்​வ​மான ஆலோ​சனை​களை ராஜகோ​பாலன் வழங்​கி​னார்.

பள்​ளிக்​கல்வி பாது​காப்பு இயக்​கத்​தின் தலை​வ​ராக செயல்​பட்டு கல்வி உரிமைக்​காக​வும் தரமான கல்விக்​காக​வும் தொடர்ந்து போராடி வந்​தார்.

ராஜகோ​பாலனின் மறைவு குறித்து தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், “மூத்த கல்வியாளர் எஸ்​.எஸ். ராஜகோ​பாலன் மறைவுற்​றார் என்ற செய்​தி​யறிந்து மிக​வும் வருத்​த​முற்​றேன்.

ஆசிரிய​ராக‌ தமது கல்​விப் பணி​யைத் தொடங்​கிய‌ அவர் தமிழக அரசு முன்​னெடுத்த சமச்​சீர்க் கல்விக் குழு​வின் உறுப்​பின​ராக இருந்து தமிழகத்​தின் கல்வி மறுமலர்ச்​சிக்கு வித்​திட்​ட​வர். கல்வி வளர்ச்​சி​யிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்​கறை காட்​டிய​வர். அவரது மறைவு கல்​வித் துறைக்​குப் பேரிழப்​பாகும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

இதேபோல், பள்​ளிக்​கல்வி துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ், தி​ரா​விடர் கழகத் தலை​வர் கீ.வீரமணி உள்​ளிட்ட அரசி​யல் தலை​வர்​களும் ராஜகோ​பாலன் மறைவுக்​கு இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here