எழும்பூர் நிலையத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்க மின் ஏலம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

0
12

எழும்பூர் ரயில் நிலைய வளாகத்​தில், நவீன அடுக்​கு​மாடி வாகன நிறுத்​து​மிடத்தை நிர்​வகிப்​ப​தற்​கும், இயக்​கு​வதற்​கு​மான மின் ஏல அறி​விப்பை சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்​டுள்​ளது.

எழும்பூர் ரயில் நிலை​யத்​தின் மறுசீரமைப்​புத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, பயணி​களின் வசதிக்​காக இரண்டு பிரம்​மாண்​ட​மான பல்​நோக்கு வணிக வளாக கட்​டிடங்​கள்கட்​டப்​பட்​டுள்​ளன.

காந்தி – இர்​வின் சாலை மற்​றும் பூந்​தமல்லி சாலை ஆகிய இரு புறங்​களி​லும் அமைந்​துள்ள இந்​தக் கட்​டிடங்​களில் வணிக அங்​காடிகள் மற்​றும் நவீன அடுக்​கு​மாடி வாகன நிறுத்​து​மிடங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

தற்​போது, காந்​தி-இர்​வின் சாலைப் பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி கட்​டிடத்​தின் 2-வது, 3-வது மற்​றும் 4-வது தளங்​களில் வாகன நிறுத்​து​மிட வசதி​கள் முழு​மை​யாகத் தயார் நிலை​யில் உள்​ளன.

இந்த நவீன வாகன நிறுத்​து​மிடத்தை நிர்​வகிப்​ப​தற்​கும், இயக்​கு​வதற்​கும் தகு​தி​யான நிறு​வனங்​களைத் தேர்வு செய்ய மின் ஏலம் மூல​மாக விண்​ணப்​பங்​களை வரவேற்கிறது.

ஒப்​பந்​தத்​தைப் பெறும் நிறு​வனம், வாக​னங்​களின் நுழைவு மற்​றும் வெளி​யேற்​றத்தை முறைப்​படுத்​துதல், வாக​னங்​களை வரிசை​யாக நிறுத்​து​வதை உறுதி செய்​தல் மற்​றும் அப்​பகு​தி​யைத் தூய்​மை​யாகப் பராமரித்​தல் ஆகிய பணி​களை மேற்​கொள்ள வேண்​டும்.

இந்த ஏல நடை​முறை அதிக அளவி​லான நிறு​வனங்​கள் பங்​கேற்​பதை உறுதி செய்​ய​வும் மற்​றும் வெளிப்​படைத்​தன்​மை​யைப் பேண​வும் ‘இ-ஏல’ (e-auction) முறை​யில் நடை​பெறவுள்​ளது.

நிர்​ண​யிக்​கப்​பட்ட விதி​முறை​கள் மற்​றும் நிபந்​தனை​களுக்கு உட்​பட்​டு, தகு​தி​யுள்ள அதி​கபட்ச ஏலத்​தொகை கோரும் விண்​ணப்​ப​தா​ரருக்கு இந்த ஒப்​பந்​தம் வழங்​கப்​படும்.

இந்த ஏல நடை​முறை, முழு​மை​யான வெளிப்​படைத்​தன்​மை​யுடன் www.ireps.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக மார்ச் 20-ம் தேதி மாலை 03.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது.

ஆர்​வ​முள்ள ஏலதா​ரர்​கள் இது குறித்த விரி​வான விவரங்​கள் மற்​றும் தகுதி வரம்​பு​களை மேற்​கண்ட இணை​யதளத்​தில் அல்​லது கோட்ட ரயில்வே மேலா​ளர் அலு​வல​கம்​, வணி​கப் பிரிவு, 2-வது தளம், என்​ஜிஒ அனெக்​ஸ், பார்க் டவுன், சென்னை – 600003 என்ற முகவரி​யில் நேரில் தொடர்​பு​கொண்டு தெரிந்​து​கொள்​ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here