Home விளையாட்டு செய்திகள் ட்ரீசா – காயத்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி

ட்ரீசா – காயத்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி

0

ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, தர வரிசையில் 24-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய், லின் யின்-ஹு ஜோடியை எதிர்த்து விளையாடியது. 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ட்ரீசா – காயத்ரி ஜோடி 16-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானுடன் மோதுகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், மலேசியாவுடன் லியோங் ஜூன்ஹாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version