திரவுபதி 2: வல்லாள மகாராஜா கதையை படமாக்கும் மோகன் ஜி

0
209

பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் அடுத்து ‘திரவுபதி’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறார். இதில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

இந்தப் படம் பற்றி மோகன் ஜியிடம் கேட்டபோது, “இது 14-ம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசளப் பேரரசின் பின்னணியில் உருவாகிறது. திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர் மன்னர் வீர வல்லாள மகாராஜா. திருவண்ணாமலை கோயிலின் ராஜகோபுரத்தை நிர்மாணித்தவர் இவர்தான்.

சிவபெருமானே இவருக்கு மகனாக வந்து பிறந்தார் என்பார்கள். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜாவுக்கு மாசி மகம் நாளில், சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் திருவண்ணாமலை கோயிலில் நடந்து வருகிறது. தர்மத்தைக் காக்க அந்த மகாராஜா என்ன செய்தார் என்பதைச் சொல்கிறோம். பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறோம். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here