Home சினிமா செய்திகள் ‘டோரதி’ கார்த்திக் சுப்பராஜின் சிறந்த படைப்பு – தனுஷ் பாராட்டு

‘டோரதி’ கார்த்திக் சுப்பராஜின் சிறந்த படைப்பு – தனுஷ் பாராட்டு

0

கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து வந்திருக்கும் சிறந்த படைப்பு இது என்று ‘டோரதி’ படத்துக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தனுஷ் பகிர்ந்துள்ள பதிவில், ‘ கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து வந்திருக்கும் மாஸ்டர் பீஸ் படம் ‘டோரதி’. துணிச்சலான மற்றும் நெஞ்சைத் தொடும் படைப்பு. இயல்பான அதேசமயம் மிகவும் தீவிரமான உணர்வுகளைக் கொண்டுள்ளது. அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் இசை உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். இசைஞானியின் ருத்ரதாண்டவம் இது.

நாளை வெளியாக இருக்கும் படத்திற்க்காக எனது அன்பு நண்பர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என வாழ்த்துக்கள். இறைவன் ஆசீர்வதிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்.

இளையராஜா இசையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கும்  ‘டோரதி’ படத்தினை அவரே தனது தம்மம் பிலிம்ஸ் கீழ் தயாரித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version