வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விவகாரம்: மக்கள் பீதி அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்

0
12

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விச​யத்​தில் மக்​கள் எவ்​வித பீதி​யும் அடைய வேண்​டாம் என எண்​ணெய் நிறு​வனங்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் நடை​பெறும் போரால், இந்​தி​யா​வில் காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக வணி​கப் பயன்​பாட்​டுக்​கான காஸ் விநி​யோகம் பெரிய அளவில் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால், பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

பல இடங்​களில் உணவுப் பட்​டியல் குறைக்​கப்​பட்​டுள்​ளன. வணிக சிலிண்டர் பாதிப்பு இருக்​கும் நிலை​யில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்​னுரிமை வழங்​கப்​படும் என மத்​திய அரசு அறி​வித்​து, சிலிண்​டரை அத்​தி​யா​வசிய பட்​டியலுக்​குள் கொண்டு வந்​துள்​ளது.

இருப்​பினும், பொது​மக்​கள் அச்​சமடைந்து உள்​ளனர். இந்​நிலை​யில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விச​யத்​தில் மக்​கள் எவ்​வித பீதி​யும் அடைய வேண்​டாம் என்ற எண்​ணெய் நிறு​வனங்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பாரத் பெட்​ரோலிய நிறு​வனம் வெளி​யிட்ட அறி​விப்​பில், “மக்​கள் பீதி அடை​யத் தேவை​யில்​லை. எல்​பிஜி விநி​யோகம் மற்​றும் சேவை​கள் தொடர்ந்து வழக்​கம் போல இயங்​கு​கின்​றன.

வாடிக்​கை​யாளர்​களை ஆதரிப்​ப​தற்​கும், சீரான செயல்​பாடு​களை உறுதி செய்​வதற்​கும், ஏற்​கெனவே 16.67 சதவீதம் பணி​யாளர்​களை எங்​கள் நிறு​வனம் அதி​கரித்​துள்​ளது, மேலும் 28.5 சதவீதம் பணி​யாளர்​களை அதி​கரிக்​கும் நடவடிக்கை நடை​பெறுகிறது.

விரை​வான முன்​ப​திவு செய்​ய​வும், புகார்​களுக்கு தீர்வு காண​வும் வாடிக்​கை​யாளர் அழைப்பு மையம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் நிறுவன அறி​விப்​பில், மக்​கள் அவசரப்​படவோ அல்​லது பீதி அடையவோ தேவை​யில்​லை.

பதுக்​கல் மற்​றும் கள்​ளச் சந்​தைப்​படுத்​தலைத் தடுக்​க​வும், அனைத்து நுகர்​வோருக்​கும் எல்​பிஜி நியாய​மான மற்​றும் சரி​யான நேரத்​தில் கிடைப்​பதை உறுதி செய்​ய​வும் முன்​ப​திவு கால இடைவெளி 25 நாட்​களாக உள்​ளது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here