2016-ல் ‘அன்சார் இன்டரிம்’ பெயரில் தீவிரவாத அமைப்பை உருவாக்கிய மருத்துவர்கள்: என்ஐஏ விசாரணையில் தகவல்

0
26

கடந்த 2016ம் ஆண்​டிலேயே பல மருத்​து​வர்​கள் இணைந்து அன்​சார் இன்​டரிம் என்ற தீவிர​வாத அமைப்பை உரு​வாக்​கியது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

கடந்த ஆண்டு நவம்​பர் 10ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​தது. இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது. அந்​தக் காரில் இருந்த மருத்​து​வர் உமர் இந்த தாக்​குதலை நடத்​தி​யது விசா​ரணை​யில் தெரிய​ வந்​தது. மேலும் இதில் ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழக மருத்​து​வர்​கள் பலருக்​கும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. கைதான மருத்​து​வர்​கள் 2016ம் ஆண்டே தீவிர​வாதப் பாதைக்​குத் திரும்பியுள்ளனர்.

ஏப்​ரல் 2022-ல் ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகு​தி​யில் ஒரு ரகசி​யக் கூட்டத்தை நடத்​திய இவர்​கள், ‘அன்​சார் இன்​டரிம்’ என்ற புதிய அமைப்​பைத் தொடங்​கி​யுள்​ளனர். இந்த அமைப்​புக்கு அதீல் ரத்தர் தலை​வ​ராக​வும், மத போதகர் மவுல்வி இர்​பான் துணைத் தலை​வ​ராக​வும் செயல்​பட்​டுள்​ளனர்.

இந்​தக் கும்​பலின் முக்​கிய செயல்​பாட்​டாள​ராக இருந்​தவர் 28 வயது மருத்​து​வர் உமர். ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் போன்ற பகுதி​களில் இருந்து வேதிப்​ பொருட்​களைச் சேகரித்​து, டெல்லியில் மக்​கள் நெருக்​கடி மிகுந்த இடங்​கள், வழி​பாட்​டுத் தலங்​களில் வாகன வெடிகுண்டு தாக்​குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஸ்ரீநகர் போலீ​ஸார் இந்​தக் கும்​பலைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து வெடி பொருட்​களைப் பறி​முதல் செய்​தவுடன், உமர் பீதியடைந்​துள்​ளார். இதனால் திட்​ட​மிட்ட காலத்​துக்கு முன்பே நவம்​பர் 10ம் தேதி செங்​கோட்​டைக்கு வெளியே குண்​டு​வெடிப்பை நிகழ்த்​தி​யுள்​ளார். இதில் உமரும் உயி​ரிழந்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here