2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை

0
23

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக படு​தோல்வி அடை​யும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் நேற்று நடந்தது. முன்னதாக, உயர்மட்ட மேம்பாலம் கட்ட கோரிக்கை எழுந்துள்ள கொளத்தூரை அடுத்த கோட்டையூரிலும், செட்டிப்பட்டியில் புதிய நீரேற்று திட்டம் அமையவுள்ள இடத்திலும் அவர் ஆய்வு செய்தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அன்புமணி கூறிய​தாவது: சேலம் மாவட்டம் கோட்டையூர் – தருமபுரி மாவட்டம் ஒட்டனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவேண்டும் என்பது மக்களின் 75 ஆண்டு்கால கோரிக்கையாகும். இது தொடர்பாக 2022-ல் முதல்வர் அறிவிப்பு வெளியானது.

இந்த மேம்பாலம் கட்ட ரூ.600 கோடி வரை செலவாகும். இந்தப் பாலத்தை ஒருமுறை கட்டினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை மீதமாகும். 45 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை செய்துவிட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். திமுக அரசு அறி​விப்பை மட்​டும்​தான் வெளி​யிட்​டுக் கொண்​டிருக்​கிறது.

தமிழகத்​தில் புதி​தாக 30 மணல் குவாரி​களை தொடங்​க​வுள்​ள​தாக அரசு அறி​வித்​துள்​ளது அதிர்ச்​சி​யளிக்​கிறது. பெரிய ஊழல், முறை​கேடு​களுக்கு வழி​வகுக்​கும் இந்த அறி​விப்பை திரும்​பப் பெற வேண்​டும். சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை மேற்​கொள்​ளக் கூடாது என்று கூறு​பவர்​கள், கள்ள வாக்​கு​கள் செலுத்​து​வதற்கு உடந்​தை​யாக இருப்​பவர்​கள்​தான்.

சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் தொடர்​பாக வரும் நவம்பர் 2-ம் தேதி நடை​பெற​விருப்​பது அனைத்​துக் கட்சி கூட்​டம் கிடை​யாது. திமுக கூட்​டணி கூட்​டம். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக படு​தோல்வி அடை​யும். இவ்​வாறு அன்​புமணி கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here