திமுக தொழிற்சங்க ஓட்டுநர்களை வழக்கமான பணிக்கு மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தல்

0
20

திமுக தொழிற்​சங்க ஓட்​டுநர்​களை வழக்​க​மான பணிக்கு மாற்ற வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக தொழிற்​சங்​கத்​தினர் நேற்று மனு அளித்​தனர்.

அதி​முக​வின் அண்ணா தொழிற்​சங்​கப் பேரவை செய​லா​ளர் கமலக்​கண்​ணன், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்கை நேரில் சந்​தித்து புகார் மனு ஒன்றை அளித்​தார்.

பின்​னர் கமலக்​கண்​ணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்த உடனேயே தமிழகம் முழு​வதும் இருக்​கக்கூடிய 329 பேருந்து பணிமனை​களி​லும் அனைத்து ஓட்​டுநர்​களும் வழக்​க​மான பணி​களுக்கு திரும்பி விட வேண்​டும் என்​பதே விதி.

லைட் டியூட்டி என்று சொல்​லப்​படும் இலகு ரக பணி​களில் இருக்​கும் பல ஆளுங்​கட்சி திமுக தொழிற்​சங்க ஓட்​டுநர்​கள் இது​வரை வழக்​க​மான பணிக்கு திரும்​ப​வில்​லை.

இதுகுறித்து சேலம், கோவை உள்​ளிட்ட போக்​கு​வரத்​துக் கழகங்​களின் பொது மேலா​ளர்​களுக்கு தகவல் தெரி​வித்​தும் அவர்​கள் ஆளுங்​கட்சி ஓட்​டுநர்​களை வழக்​க​மான பணி​களுக்கு விடுவிக்​க​வில்​லை.

உடனடி​யாக அனைத்து ஓட்​டுநர்​களுக்​கும் வழக்​க​மான பணியை வழங்க வேண்​டும். இதை செய்​யத் தவறி​னால் அதி​முக தொழிற்​சங்க ஓட்​டுநர்​கள் தமிழகம் முழு​வதும் போராட்​டத்​தில் ஈடு​படு​வர்.

லைட் டியூட்டி பணி​யில் ஒரு பணிமனைக்கு 10 முதல் 15 நபர்​கள் இருப்​பர். தமிழகம் முழு​வதும் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மொத்த பணி​யாளர்களான ஒரு லட்சம் பேரில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் லைட் டியூட்​டி​யில் இருப்​பார்கள்.

லைட் டியூட்​டி​யில் இருப்​பவர்​கள் அதி​காரி​களுக்கு வாக​னம் ஓட்​டு​வ​தாக கூறிச் சென்​று​விட்டு ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வாக தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டுக் கொண்​டிருக்​கின்​றனர். இதனால் மற்ற ஓட்​டுநர்​கள் கூடு​தல் பணிச்​சுமை ஏற்​படு​கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here