Home தேசிய செய்திகள் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்

0

ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்​சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையைக் கடந்​தது. இதன் காரணமாக புதுச்​சேரி மற்றும் அதனை சுற்றி​யுள்ள தமிழகப் பகுதி​களில் அதிக​னமழை பெய்​துள்ளது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. புதுச்​சேரி​யின் பத்துக்​கண்​ணு​வில் 45 செ.மீ. திருக்​க​னூரில் 43 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்​டிவனத்​தில் 37 செ.மீ. நேமூரில் 35 செ.மீ. புதுச்​சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்​தில் 32 செ.மீ. செம்​மேடில் 31 செ.மீ. வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ. விழுப்பு​ரத்​தில் 27 செ.மீ. செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது.

புதுச்சேரி அருகே நிலைகொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவுகிறது. இதன் காரண​மாக, இன்று (டிச.2) நீலகிரி, கோவை, திருப்​பூர், திண்​டுக்கல், ஈரோடு மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்​கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஒத்திவைப்பு தீர்மானம்: ஃபெஞ்சல் புயல், கனமழையால் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பு வேண்டும் என வலியுறுத்தியும், புயல் பாதிப்புகள் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரியும் மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version