“டிசைன் டிசைனாக பொய் பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள்” – அண்ணாமலை கடும் தாக்கு

0
19

தி​​முக​வினர் டிசைன் டிசை​னாக பொய் பேசுவ​தில் வல்​ல​வர்​கள் என்று பாஜக முன்​னாள் தலை​வர்அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி மற்​றும் திருப்​பத்​தூரில் தே.ஜ. கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது, அவர் பேசி​ய​தாவது: தி​முக அரசு மீது மக்​கள் கோபத்​தில் உள்​ளனர். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படு​வது உறு​தி. ஏராள​மான குற்​றங்​கள் நடக்​கும் தமிழகம் எப்​படி அமை​திப் பூங்​கா​வாக இருக்க முடி​யும்? இந்​தத் தேர்​தல், பிடித்த வேட்​பாள​ருக்கு வாக்​களிப்​ப​தற்​கான தேர்​தல் இல்​லை. ஆட்சி மாற்​றத்​துக்​கான தேர்​தல்​.தமிழகத்​தில் முதல் தலை​முறை வாக்​காளர்​கள் 17லட்​சம் பேர் உள்​ளனர். அவர்கள் மாற்​றத்​துக்​காக வாக்​கு​களைச் செலுத்த வேண்​டும்.

தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. தி​முக ரவுடி கட்​சி​யாக மாறி​விட்​டது. நான் கொடுத்த வாக்​குறு​தி​களை மறுக்​க​வும் மாட்​டேன்; மறக்​க​வும் மாட்​டேன் என்​கிறார் ஸ்டா​லின். அதை எப்​போது நிறைவேற்​றப் போகிறார் எனறு தெரிய​வில்​லை.வாக்​குறு​தி​களில் 15 சதவீதம்​தான் நிறைவேற்​றி​யுள்​ளனர். ஆனால் 99 சதவீதம் நிறைவேற்றி விட்​ட​தாக ஸ்டா​லின் கூறுகிறார்.

அவருக்கு கணக்கு சொல்​லிக் கொடுத்த வாத்​தி​யார் நல்​ல​வர்​தான். மாணவன் தான்​ மக்​கு. அதே​போல் தான் கனி​மொழி​யும் புளுகு மூட்​டை​யாக மாறி​விட்​டார். தி​முககாரர்​கள் டிசைன், டிசை​னாக பொய் பேசுவ​தில் வல்​ல​வர்​கள். வீடு​தோறும் குடிநீர் திட்​டத்​துக்​​காக மத்​தியஅரசு ரூ.4,835 கோடி ஒதுக்​கியது. ஆ​னால்​ சிவகங்​கை ​மாவட்​டத்​தில்​ தண்​ணீர்​ இல்​லாமல்​ ​நாட்​​டாகுடி கி​ராமமே ​காலி​யாகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here