சோழிங்கநல்லூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் பெருமிதம்

0
31

தமிழகத்​தில் அதிக வாக்​காளர் களைக் கொண்ட பெரிய தொகுதி என்ற தனிச்​சிறப்பு வாய்ந்தது சோழிங்​கநல்​லூர் தொகு​தி.

சென்​னையை ஒட்டி ஓஎம்​ஆர் சாலையில் அமைந்​துள்ள சோழிங்​கநல் லூரில் ஏராள​மான தகவல் தொழில்நுட்ப நிறு​வனங்​கள், எல்​காட் சிறப்பு பொருளா​தார மண்​டலம், பொறி​யியல் கல்​லூரி​கள், உலகளா​விய திறன் மையங்​கள் என பலதரப்​பட்ட நிறு​வனங்​கள் இயங்கி வரு​கின்​றன.

ஐடி நிறு​வனங்​களின் அதி​கரிப்பால் குடி​யிருப்​பு​களும் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களும் பெருகி வரு​கின்றன. இத்​தொகு​தி​யின் தற்​போதைய எம்​எல்​ஏ​வான அரவிந்த் ரமேஷ், மீண்​டும் களம் காண்​கிறார்.

இல்​லத்​தரசி களுக்கு ரூ.8 ஆயிரம் பரிசு கூப்​பன், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிர​மாக அதி​கரிப்பு என திமுக​வின் தேர்​தல் வாக்​குறுதிகளு​டன் கடந்த ஐந்​தாண்​டு​களில் தான் செய்​துள்ள வளர்ச்சி பணிகளை​யும், தொகு​தி​யில் செய்​யப்​பட்டுள்ள சாலை, குடிநீர், மழைநீர் வடி​கால், பாதாளச் சாக்​கடை வசதி உள்​ளிட்ட பணி​களை​யும் சொல்லி பொது​மக்​களிடையே வாக்கு சேகரித்து வரு​கிறார்.

இதுகுறித்து அரவிந்த் ரமேஷ் கூறிய​தாவது:

முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு

ஏழை மக்​கள் பயன்​பெறும் வகை​யில் பெரும்​பாக்​கம் தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய பகு​தி​யில் ரூ.66.6 கோடி மதிப்​பீட்​டில் சோழிங்​கநல்​லூர் புறநகர் அரசு மருத்​து​வ​மனை கொண்​டு​வந்​துள் ளதை எனது முக்​கிய​மான பணி​யாக கருதுகிறேன்.

பெரும்​பாக்​கம், ஒட்டியம்​பாக்​கம் செம்​மஞ்​சேரி பகுதிகளில் ரூ.165.32 கோடி செல​வில் நீர்வளத்​துறை சார்​பில் மழைநீர் வடிகால் அமைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, மழைக்​காலங்​களில் இப்​பகு​தி​யில் தண்​ணீர்தேங்​கும் பிரச்​சினையே எழாது.

பள்​ளிக்​கரணை அணை ஏரி பகு​தி​யில் இருந்து சதுப்பு நில பகு​திக்கு கொண்​டு​செல்ல ரூ.57.60 கோடி செல​வில் மழைநீர் கால்​வாய் அமைக்​கும் பணி நிறைவடைந்​துள்​ளது. அதே​போல், சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட மண்​டலம் 14 மற்​றும் 15 பகு​தி​யில் ரூ.1,337.95 கோடி செல​வில் மழைநீர் வடி​கால் பணி​களும் ரூ.1,283 கோடியில் பாதாளச் சாக்​கடை மற்றும் குடிநீர் வழங்​கல் பணி​களும் முழூவீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன.

மேலும், பல்​லா​வரம் – துரைப்​பாக்கம் ரேடியல் சாலை – எம்​ஆர்​ஆர்​-இசிஆர் இணைப்பு சாலை​யில் ஏறத்தாழ 2.5 கி.மீ. பெரு மூடு மழைநீர் கால்வாய் அமைக்​கும் பணி ரூ.70 கோடியிலும், சோழிங்​கநல்​லூர் கேகே நகர் சாலை – செம்​மொழிச்​சாலை​யில் 1.7 கி.மீட்​டரில் பெரு​மூடு மழை கால்​வாய் பணி​யும் வேக​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

பள்​ளிக்​கரணை நாராயணபுரம் ஏரி​யில் இருந்து சதுப்பு நில பகு​திக்கு மழைநீர் வடி​கால் அமைக்​கும் பணிக்கு ரூ.44 கோடி ஒதுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

உழைக்​கும் மக்​கள் அதி​கம் வசிக்​கக்​கூடிய பகு​திகளான கண்​ணகி நகர், எழில்​நகர் செம்​மஞ்​சேரி மற்​றும் பெரும்​பாக்​கத்தில் ரூ.569.32 கோடி மதிப்​பீட்​டில் பூங்​கா, விளை​யாட்டு திடல், நூல​கம், சமு​தாய நலக்​கூடம் மற்​றும் குடிநீர் தொட்டி அமைக்​கும் பணி​கள் முழுவீச்​சில் நடந்த வண்​ணம் உள்​ளன.

எனது தொகு​திக்கு உட்​பட்ட புனித தோமை​யார் மலை ஒன்றியத்​தில் 7 ஊராட்​சிகளில் சாலை, பூங்கா அமைக்​கும் பணி ரூ.74.11 கோடி செல​வில் நடந்து வரு​கிறது. செம்​மொழி சாலை, பெருங்குடி, துரைப்​பாக்​கம் உள்​ளிட்ட இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் அகற்​றப்​பட்​டுள்​ளன.

திரு​வான்​மியூர் முதல் உத்​தண்டி வரை ரூ.2,100 கோடி மதிப்​பீட்​டில் பிரம்​மாண்ட உயர்​மட்ட பாலம் அமைக்கப்பட உள்​ளது.

அதே​போல், செம்​மஞ்சேரி​யில் 102 ஏக்​கர் அரசு நிலங்​கள் மீட்​கப்​பட்டு அந்த இடத்​தில் ரூ.301 கோடி செல​வில் நவீன விளை​யாட்டு மைதானம் அமைக்​கும்​ பணி விரைவில்​ தொடங்​க உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here