மூச்சுவிடுவதில் சிரமம்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றம்

0
57

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணுக்கு இரவில் திடீரென மூச்​சு​விடு​வ​தில் சிரமம் ஏற்பட்டதால், நந்​தனம் தனி​யார் மருத்​து​வ​மனையி​லிருந்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். மருத்​து​வர்​கள் குழு​வினர் அவரது உடல்​நிலை​யைக் கண்​காணித்து தேவை​யான சிகிச்​சைகளை அளித்து வரு​கின்​றனர்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு. கடந்த 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

தலை​யில் தையல் போடப்​பட்​டு, தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த அவரை மருத்​து​வர்​கள் குழு​வினர் கண்​காணித்து வந்​தனர். மேலும் 100 வயதாகி​யுள்ள அவருக்கு வயது மூப்பு காரண​மாக உடம்​பில் ஏற்​பட்​டுள்ள மற்ற சில பிரச்​சினை​களுக்​காக நரம்​பியல், நுரை​யீரல், இதயம் மருத்​துவ நிபுணர்​கள் குழு​வினர் சிகிச்சை மேற்​கொண்​டனர்.

இந்​நிலை​யில், அவருக்கு இருந்த நுரை​யீரல் கோளாறால் நேற்று முன்​தினம் இரவு சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. எனவே அவர் உடனடி​யாக சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

மருத்​து​வர்​கள் குழு​வினர் அவரது உடல்​நிலை​யைக் கண்​காணித்து தேவை​யான சிகிச்​சைகளை அளித்து வரு​கின்​றனர். ‘மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட​போது இருந்​ததை விட, தற்​போது நல்​ல​கண்​ணு​வின் உடல்​நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது’ என்று மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

குடும்​பத்​தினர், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், துணைச் செய​லா​ளர்​கள் மு.வீர​பாண்​டியன், நா.பெரிய​சாமி, சமூக சமத்​து​வத்​துக்​கான டாக்​டர்​கள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் மருத்​து​வர் ஜி.ஆர்​.ர​வீந்​திர​நாத் ஆகியோர் மருத்​து​வ​மனை​யில் தங்கி நல்​ல​கண்​ணுவை கவனித்து வரு​கின்​றனர்.

நேற்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, விசிக தலை​வர் திரு​மாவளவன் மருத்​து​வ​மனைக்கு வந்து நல்​ல​கண்​ணு​வின் உடல்​நிலை குறித்து விசா​ரித்​தனர். அதே​போல் தவெக தலை​வர் நடிகர் விஜய் மற்​றும் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த் ஆகியோர் செல்​போனில் நல்​ல​கண்​ணு​வின் பேரனை தொடர்பு கொண்டு உடல்​நிலை குறித்​து வி​சாரித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here