விஜய்யிடம் கால்ஷீட் கேட்டேனா? – வதந்தி குறித்து சிம்ரன் ஆவேசம்

0
284

நடிகை சிம்ரன், தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாயின. அதோடு அவருடைய கடைசிப் படமான விஜய் 69-ல் நடிக்க வாய்ப்புக் கேட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அதை மறுத்துள்ள சிம்ரன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன். இப்போது என் வாழ்வின் இலக்குகள் மாறிவிட்டன. ஒருபெண்ணாக, எனது எல்லைகளை அறிவேன். சமூக வலைதளங்களில் என் பெயரை சிலருடன் இணைத்துப் பேசியபோது அமைதியாக இருந்தேன்.ஆனால், சுயமரியாதை முக்கியம். ‘ஸ்டாப்’ என்பது சக்திவாய்ந்த வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற வதந்தி பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here