‘சக்திமான்’ உரிமையை பெற்றாரா? – ரன்வீர் சிங் மறுப்பு

0
111

இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது.

குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ தொடராகவும் அப்போது இருந்தது. இதை, தின்கர் ஜெயின் இயக்கி இருந்தார். இத்தொடரை சினிமாவாக எடுக்க இருப்பதாக முகேஷ் கன்னா, கடந்த வருடம் தெரிவித்திருந்தார். இதில் சக்திமான் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் அதன் திரைப்பட உரிமையை பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் ரன்வீர் சிங் தரப்பு இத்தகவலை அறிக்கை மூலம் மறுத்துள்ளது. “‘சக்திமான்’ படத்தின் உரிமையைப் பெற்றுள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ரன்வீர் தற்போது ஆதித்யா தாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தொடர்ந்து ‘டான் 3’ படத்திலும் நடிக்க இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, முகேஷ் கன்னா அளித்த பேட்டியில், ‘ரன்வீர் சிறந்த நடிகர். ஆனால் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கப் பொருத்தமானவர் அல்ல. அதனால் அந்த வேடத்துக்கு அவரை அங்கீகரிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here