Home தேசிய செய்திகள் ஆந்திர கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்: இந்து அறநிலையத் துறை அதிகாரி விசாரணை

ஆந்திர கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்: இந்து அறநிலையத் துறை அதிகாரி விசாரணை

0

ஆந்​திர மாநிலம் கிருஷ்ணா மாவட்​டம், குடி​வா​டா​வில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்​யாண வெங்​கடேச பெரு​மாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலை​யத் ​துறையின் கீழ் செயல்படுகிறது.

இந்​நிலை​யில், கடந்​தாண்டு ஜனவரி மாதத்​தில், மாட்​டூரி சுப்​பா​ராவ் எனும் பக்​தர், 461 கிராம் எடை​யில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்​கை வழங்​கி​னார். இதன் தற்​போதைய மதிப்பு ரூ.1 கோடி என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன் கோயிலுக்கு சென்ற மாட்​டூரி சுப்​பா​ராவ், சுவாமிக்கு வைர கிரீடத்தை சூட்டி அழகு பார்க்க வேண்​டும் என கூறி​யுள்​ளார்.

ஆனால், அது வங்​கி​ லாக்​கரில் வைக்​கப்​பட்​டுள்​ளது என கோயில் நிர்​வாகம் கூறியுள்​ளது. ஒவ்வொரு முறையும் இதே பதிலை சொன்னதால் சந்தேகம் அடைந்த சுப்​பா​ராவ் இந்து சமய அறநிலைத் ​துறை​யில் முறை​யிட்​டுள்​ளார். அதன்​பேரில், நேற்று உதவி ஆய்​வாளர் லலிதா ​கோ​யிலில் விசா​ரணை நடத்​தி​னார். அப்போது அறங்​காவலர் குழு​வில் இடம்​பெற்​றுள்ள 31 பேரும் ஊரில் இல்லை என கூறி​யுள்​ளனர்.

எனவே, நன்​கொடை​யாளரிடம் வைர கிரீடம் குறித்து தகவல்களை சேகரித்​தார். தற்​போது அந்த கிரீடம், கோயில் மராமத்​து பணிகளுக்​காக ஒரு அடகு கடை​யில் அடகு வைக்கப்பட்​டுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. ஆதலால், அந்த அடகு கடைக்காரருக்​கும் தற்​போது அடுத்த விசா​ரணைக்கு ஆஜர் ஆக வேண்டுமென நோட்​டீஸ் பிறப்பிக்​கப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version