பெங்களூரு: இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கே.எல்.ராகுல் 19, அபிமன்யு ஈஸ்வரன் 0, சாய் சுதர்சன் 17, தேவ்தத் படிக்கல் 5, கேப்டன் ரிஷப் பந்த் 24, ஹர்ஷ் துபே 14, ஆகாஷ் தீப் 0, குல்தீப் யாதவ் 20, முகமது சிராஜ் 15, பிரசித் கிருஷ்ணா 0 ரன்களில் நடையை கட்டினர். தனிநபராக போராடி சதம் அடித்த துருவ் ஜூரெல் 175 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி சார்பில் இடதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான தியான் வான் வூரன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷெபோ மோரேகி, பிரெனலன் சுப்ராயன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 2-வது நாளான இன்று பேட்டிங்கை தொடங்குகிறது.














