குமரியில் ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் தர்ணா

0
222

தமிழ்நாடு மாநில ஊரகவாழ். வாதார இயக்க பணியாளர்களுக்கு வருடாந்திர ஓய்வூதியம் வேண்டும், அனைத்துத் துறை அலுவலக வேலைகளை பார்க்க சொல்வதை தவிர்க்க வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் பணியின் போது இறந்தவர்களுக்கு துறை சார்ந்த இழப்பீடு ஆகியவை வழங்குவது அவசியம்,

வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே என நிர்ணயிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நேற்று (செப்.,24) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கூடுதல் கட்டிட படிக்கட்டுகளில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் தற்காலிக அனைத்து பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். தர்ணா போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here