திக்கணங்கோட்டில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் தொடங்கி வைத்தார்

0
338

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை  பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ்  நேற்று (செப்.,19) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், திக்காணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 67 இலட்சம் மதிப்பில் மைலோடு- சேவியர்புரம் – புதூர், கொட்டாரத்துவிளை சாலை சீரமைக்கும் பணியினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.   இச்சாலை  தரமானதாக இருக்கவும், விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு  தெரிவித்தார்.

முன்னதாக  பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அமைச்சர்  பெற்றுக்கொண்டார்.  நிகழ்ச்சியில்  ஊராட்சிமன்ற தலைவர் ராஜம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here