Home கன்னியாகுமரி செய்திகள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகள் இடிப்பு; வழக்கு பதிவு

மாற்றுத்திறனாளிகளின் வீடுகள் இடிப்பு; வழக்கு பதிவு

0

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கச்சேரி நடை பகுதியை சேர்ந்தவர்கள் றாபி (43), ஸ்ரீ லதா (53). றாபிக்கு கிறிஸ்டினா ( 32) என்ற  மனைவி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீலதாவுக்கு திருமணமாகவில்லை. மாற்றுத்திறனாளியான சூரியதேவன் (47) என்ற தம்பியுடன் அவரும் வசித்து வருகிறார்.

இரண்டு குடும்பத்தினருக்கும் இவர்கள் நிலத்தை ஒட்டி உள்ள ஒருவருக்கும் நில சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று (செப்.,24) காலை சுமார் 50 பேர் கொண்ட கும்பல் திடீர் என ஆயுதங்களுடன் வந்து றாபியின் வீட்டை உடைத்து தரைமட்டம் ஆகிவிட்டு வீட்டிலிருந்து பொருட்களை அனைத்தையும் சூறையாடி விட்டு சென்றுள்ளனர். இதில் கிறிஸ்டினாள் காயம் அடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே கும்பல் ஸ்ரீலதாவின் வீட்டின் கழிவறையும் இடித்து தரைமட்டமாகி விட்டு சென்றுள்ளது. தகவல் அறிந்து குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கவுதம் மற்றும் கிள்ளியூர் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடம்தான் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version