Home மாநில செய்திகள் விவசாயிகள், ஆசிரியர் வழக்கை ரத்து செய்தது போல் அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய...

விவசாயிகள், ஆசிரியர் வழக்கை ரத்து செய்தது போல் அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை

0

விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் மீதான வழக்​கு​களை ரத்து செய்​ததை போல், திமுக ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​கள் மீது மேற்​கொள்​ளப்​பட்ட பழி​வாங்​கும் நடவடிக்​கைகளை ரத்து செய்ய வேண்​டும் என்று முதல்​வர் விஜய்க்கு அவர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர்.

அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழுத் தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் இன்று பதில் அளிக்க இருக்​கிறார். சுகா​தா​ரத் துறை மானியக் கோரிக்​கை​யின் போது, மருத்​து​வர் பணி​யிடங்​களை 2 மடங்​காக அதி​கரித்​தல், மருத்​து​வர்​களின் நீண்​ட​கால ஊதிய கோரிக்​கையை நிறைவேற்​று​வது குறித்த அறி​விப்பு வெளி​யிடப்​பட​வில்​லை.

கடந்த திமுக ஆட்​சி​யில் விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் மீது போடப்​பட்ட அனைத்து வழக்​கு​களும் ரத்து செய்​யப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​தார். அதே​போல், முந்​தைய ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​கள் தங்​களின் கோரிக்​கையை வலி​யுறுத்தி பாத​யாத்​திரை மேற்​கொண்​டதற்​காக, எடுக்​கப்​பட்ட பழி​வாங்​கும் நடவடிக்​கைகள் ரத்து செய்​யப்​படும் என்ற அறி​விப்பை முதல்​வர் விஜய் தனது பதி​லுரை​யில் அறிவிக்க வேண்​டும்.

கரோனா பெருந்​தொற்று காலத்​தில் பணி​யின் போது தொற்று ஏற்​பட்டு உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு அரசு வேலைக்​கான ஆணை விரை​வில் வழங்​கப்​படும் எனவும், அரசாணை 354-ன் படி அரசு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் வழங்​கப்​படும் என்​றும் முதல்​வர் அறி​விப்​பு​களை வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version