டெல்லி: பீடி பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் கொலை

0
44

டெல்லி வசந்த் கஞ்ச் பகு​தி​யில் செவ்​வாய்க்கிழமை இரவு மோதல் நடப்​ப​தாக காவல் துறைக்கு தகவல் கிடைத்​தது.

சம்பவ இடத்​துக்கு சென்​றபோது காயமடைந்த கரண் என்ற 21 வயது இளைஞர் ஏற்​கெனவே மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்லப்​பட்​டது தெரிய​வந்​தது. ஆனால், அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​த​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

கரணிடம் சிலர் பீடி பற்​றவைக்​கத் தீப்​பெட்டி கேட்​டுள்​ளனர். அதை தர மறுத்​த​தால் ஆத்​திரமடைந்த கும்​பல் கரணை கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​யுள்​ளது. இதுகுறித்து போலீ​ஸார் விசாரிக்கின்றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here