Home உலக செய்திகள் டெல்லி டு சான்பிரான்சிஸ்கோ ‘ஏர் இந்தியா’ விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது

டெல்லி டு சான்பிரான்சிஸ்கோ ‘ஏர் இந்தியா’ விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது

0

டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-183’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.

“டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஏஐ-183 தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தூக்கு (UNKL) திருப்பி விடப்பட்டுள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து நாங்கள் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அதே நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை தான் நாங்கள் பிரதானமானதாக கொண்டுள்ளோம்” என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version