டெல்லி குண்டுவெடிப்பு: கவலையுடன் காத்திருந்த உயிரிழந்தோரின் குடும்பத்தார்

0
15

 டெல்லி கார் வெடிப்பு சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அவர்​களு​டைய உடல்​கள் எல்​என்​ஜேபி மருத்​து​வ​மனையில் பிரேதப் பரிசோதனைக்​காக வைக்​கப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தார் நேற்று காலை முதல் மருத்​து​வ​மனை வாயி​லில் கவலை தோய்ந்த முகத்​துடன் அமர்ந்​திருந்​தனர். மருத்​து​வ​மனை​யிலுள்ள சவக்​கிடங்​குக்கு அதிக போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. ஏராள​மான போலீ​ஸாரும் மருத்​து​வ​மனை​யில் குவிக்​கப்​பட்​டிருந்​தனர். உயி​ரிழந்​தோரின் உடல்​கள் எப்​போது தங்​களுக்​குக் கிடைக்​கும் என்ற தகவலுக்​காக மருத்​து​வ​மனை​யில் அவர்​கள் அங்​குமிங்​கும் ஓடிக் கொண்​டிருந்​தனர்.

சவக்​கிடங்​கில் பணி​யாற்​றும் மருத்​து​வ​மனை ஊழியர் ஒரு​வர் கூறும்​போது, “சவக்​கிடங்​கில் வைக்​கப்​பட்​டுள்ள இறந்​தவர்​களின் உடல்​களைப் பார்க்​கவே பயங்​கர​மாக உள்​ளது. அடை​யாளம் கண்​டு​பிடிக்க முடி​யாத நிலை​யில் சடலங்​கள் உள்​ளன. சில சடலங்​கள் வெறும் சதைக் குவியல்​களாக உள்​ளன’’ என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here