நடப்பு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
டெல்லியின் பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டரில் ஆடிய நன்கு பேரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். அது அந்த அணி இலக்கை விரைந்து எட்ட உதவியது. இந்த வெற்றியின் மூலம் வரும் 5-ம் தேதி நடைபெற்ற உள்ள இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டெல்லி கேப்பிடல்ஸ் எதிர்கொள்கிறது.
வதோதராவில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பெத் முனி 62, ஜார்ஜியா 35 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு உதவினர். டெல்லி தரப்பில் சினேல் – 3, நந்தினி – 2, மின்னு – 1 விக்கெட் வீழ்த்தினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. அந்த அணிக்காக இன்னிங்ஸை ஓபன் செய்த லிசெல் லீ மற்றும் ஷெபாலி வர்மா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தனர். லிசெல் 43 மற்றும் ஷெபாலி 31 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த லாரா வோல்வார்ட் மற்றும் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இல்லைனு 68 ரன்கள் சேர்த்தனர். லாரா, 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ஜெமிமா 23 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். 169 ரன்கள் இலக்கை 3 விக்கெட் இழப்புக்கு 15.4 ஓவர்களில் எட்டியது டெல்லி அணி. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் இறுதிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.



