Home சினிமா செய்திகள் அல்லு அர்ஜுன் – அட்லி படத்துக்கு 100 நாள் கால்ஷீட் கொடுத்த தீபிகா!

அல்லு அர்ஜுன் – அட்லி படத்துக்கு 100 நாள் கால்ஷீட் கொடுத்த தீபிகா!

0

‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.

ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவர் தொடர்பான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் அவர் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார்.

ஆயுதம் தாங்கிய வீராங்கனை போல அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘அவதார்’ போன்ற வேறு ஒரு பிரபஞ்சம் உட்பட இரண்டு தனித்துவமான உலகில் இதன் கதை நடக்கிறது என்கிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version