உ.பி.யில் முஸ்லிம் மதத் தலைவருக்கு தொடர்புடைய 8 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முடிவு

0
15

உத்​தரபிரதேசத்​தில் முஸ்​லிம் மதத் தலை​வர் தவு​கீர் ராஸாவுக்​குத் தொடர்​புடைய 8 ஆக்​கிரமிப்பு கட்​டிடங்​களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்​துள்​ளது. உ.பி.​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெற்று வருகிறது.

கான்​பூர் மாவட்​டத்​தில் உள்ள ராவத்​பூர் என்ற இடத்​தில், கடந்த 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்​டி, ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் அச்​சிடப்​பட்ட போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டன. மேலும் இந்த வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் அங்கு நடை​பெற்ற ஊர்வலத்தில் முஸ்​லிம்​கள் கொண்டு சென்​றனர்.

இதற்கு இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​ததை அடுத்​து, 24 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதை எதிர்த்​து, பரேலி மாவட்டத்தில் முஸ்​லிம்​கள் கடந்த வாரம் பேரணி நடத்​தினர். அவர்​களை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். அப்​போது இரு தரப்​பினருக்​கும் இடையே மோதல் வெடித்​தது. அப்​பகு​தி​யில் இருந்த வாக​னங்​கள், கடைகள் சூறை​யாடப்​பட்​டன.

இந்த பேரணியை துாண்டி விட்​ட​தாகக் கூறி, உள்​ளூர் முஸ்​லிம் மதகுரு​வும், இத்​தேஹாத்​-இ-மில்​லத் கவுன்​சில் தலை​வரு​மான தவுகீர் ராஸா கான் உட்​பட 30-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், மதகுரு தவு​கீர் ராஸா கானின் நெருங்கிய கூட்​டாளி நதீமை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது போலீ​ஸார் செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் பரேலி மாவட்ட வளர்ச்சி ஆணை​ய​மும், மாவட்ட நிர்​வாக​மும் இணைந்து பழைய ஜகத்​பூர் மற்​றும் ஜகத்​பூரிலுள்ள ஃபைக் என்​கிளேவ் பகு​தி​களில் ஆய்வு செய்​தனர். அப்​போது அங்கு 8 கட்​டிடங்​கள் முறை​யான அனு​மதி பெறாமலும், ஆக்​கிரமிப்பு செய்​தும் கட்​டப்​பட்​டிருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. இவை அனைத்​தும் அரசு நிலங்​களை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருப்​ப​தாக​வும் தெரிய​வந்​துள்​ளது.

இந்த கட்​டிடங்​களுக்​கும், மதகுரு தவு​கீர் ராஸாவுக்​கும் நெருங்​கிய தொடர்பு இருப்​ப​தாகத் தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்து 8 கட்டிடங்​களை இடிக்க கான்​பூர் மாவட்ட நிர்​வாக​மும், பரேலி வளர்ச்சி ஆணை​ய​மும்​(பிடிஏ) முடிவு செய்​துள்​ளது. தவு​கீர் ராஸாவின் கூட்​டாளி​கள் ச​தாம்​, ஆதிக்​ அகமது, பர்​ஹத்​, முகமது ஆரிப்​ உள்​ளிட்​டோருக்​குச்​ சொந்​த​மான கட்​டிடங்​கள்​ இவை எனத்​ தெரிய​வந்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here