ஆந்திராவின் கோனசீமா மாவட்டம், ராயவரம் கணபதி மைதானத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை பார்சல் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. இங்கு புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 4 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை மோசமாக இருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆக உயர்ந்திருக்கிறது.