டேனியல் பாலாஜி​யின் கடைசி படம்!

0
147

மறைந்த டேனியல் பாலாஜி நடித்துள்ள படம், ‘ஆர்பிஎம்’. பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ள இதில் கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, சுனில் சுகதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்துள்ளார். இதை கோல்டன் ரீல் இன்டர்நேஷனல் புரொடக் ஷன் சார்பில் கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார்.

படம் பற்றி பிரசாத் பிரபாகர் பேசும்போது, ‘டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில் அவர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்” என்றார். தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் டீஸர், டிரெய்லர் வெளியிடப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here