ராமபுரம் மாதா குருசடி சேதம்: ஊர் மக்கள் மனு

0
223

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமபுரம் புனித புனித கார்மல் அன்னை மகிமை ஊர் வளர்ச்சி மற்றும் நிர்வாக கமிட்டி செயலாளர் ஜோசப் ராஜேந்திரன் தலைமையில் ஊர் பொதுமக்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் ஊரில் அமைந்துள்ள குருசடியை சிலர் மத கலவரத்தை தூண்டும் வகையில் சேதப்படுத்தி உள்ளனர்.

கண்ணாடியை உடைத்து மாதா சொரூபத்தையும் மோசமாக சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் ஊர்மக்கள் மன வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here