Home விளையாட்டு செய்திகள் ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தடுமாற்றம்: ஆறுதல் தந்த ஜேமி ஓவர்டன் – RR vs CSK

ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தடுமாற்றம்: ஆறுதல் தந்த ஜேமி ஓவர்டன் – RR vs CSK

0

நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 127 ரன்களில் கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் ஜேமி ஓவர்டனை தவிர்த்து மாற்று சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் ரன் சேர்க்க தடுமாறினர்.

ஐபிஎல் 2026 சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பெங்களூரு – ஹைதராபாத் மற்றும் மும்பை – கொல்கத்தா இடையிலான ஆட்டங்களில் 4 அணிகளும் தலா 200+ ரன்கள் எடுத்தன. இந்நிலையில், குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை மேற்கொண்டன.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடும் முதல் ஆட்டம் இது. இதில் 6 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் விளையாடி இருந்தார்.

அவரை தொடர்ந்து அடுத்தடுத்து சிஎஸ்கே வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 6, ஆயுஷ் மாத்ரே 0, மேத்யூ ஷார்ட் 2, சர்பராஸ் கான் 17, ஷிவம் துபே 6, கார்த்திக் சர்மா 18, நூர் அகமது 1, மேட் ஹென்றி 5, ஓவர்டன் 43 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஜேமி ஓவர்டன் ஆறுதல்: 10.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்து சிஎஸ்கே தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில் இருந்து சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்டன் பொறுப்பாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். கடைசி ஓவரில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 128 ரன்கள் தேவை. அந்த அணி தரப்பில் ஆர்ச்சர், பர்கர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சந்தீப் சர்மா, பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

காயம் காரணமாக இந்த சீசனில் முதல் இரண்டு வார காலம் சிஎஸ்கே வீரர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 சீசனில் இரண்டு ஆட்டங்களில் தோனி விளையாடவில்லை. அந்த இரண்டு ஆட்டத்திலும் சிஎஸ்கே தோல்வியடைந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version