சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடந்த சிஎஸ்கே ரீயூனியன் விழா

0
24

சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. மைதானத்​தில் ஏராள​மான சென்னை ரசிகர்​கள் உற்​சாகத்​துடன் நிகழ்ச்சியைக் கண்​டுகளித்​தனர்.

வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்​ளிட்​ட10 அணி​கள் பங்கேற்​கும் ஐபிஎல் 2026 சீசன் போட்டி தொடங்​க​வுள்​ளது. இதையொட்டி ரசிகர்​களை உற்​சாகப்​படுத்​தும் வித​மாக ‘ரோர் 26’ என்ற சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்​சிக்கு சிஎஸ்கே நிர்​வாகம் நேற்று ஏற்​பாடு செய்​திருந்​தது. சென்னை சேப்பாக்​கம் மைதானத்​தில் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்​கியது.

காட்​சிப் போட்​டி, இசை நிகழ்ச்​சி, பொழுது போக்கு நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல அம்​சங்​களு​டன் நிகழ்ச்சி நடந்​தேறியது. இந்த நிகழ்ச்​சிகளைக் காண ஆயிரக்​கணக்​கான ரசிகர்​கள் நேற்று மைதானத்​தில் குவிந்​தனர். நிகழ்ச்​சி​யில் சிஎஸ்கே முன்​னாள் வீரர்​கள் சுரேஷ் ரெய்​னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய், எஸ். பத்ரிநாத் போன்ற வீரர்​கள் மைதானத்​துக்கு வந்​த​போது ரசிகர்​கள் உற்​சாகக் குரல் எழுப்​பினர்.

அணி​யின் நட்​சத்​திர வீரர் தோனி மைதானத்​தில் நுழைந்​த​போது ரசிகர்​கள் பலத்த கரகோஷத்தை எழுப்பி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து சிஎஸ்​கே​வின் முன்னாள் வீரர்​கள் மற்​றும் புதிய வீரர்​கள் பங்​கேற்ற நட்பு ரீதி யி​லான கிரிக்​கெட் போட்டி நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானின் இசை நிகழ்ச்​சி நடந்​தேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here