Home கன்னியாகுமரி செய்திகள் காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் குற்றங்களின் எண்ணிக்கை குறைவு: குமரி எஸ்.பி. தகவல்

காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் குற்றங்களின் எண்ணிக்கை குறைவு: குமரி எஸ்.பி. தகவல்

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் 13,356 சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு – குற்றங்கள் குறைந்ததாக காவல் கண்காணிப்பாளர் தகவல்
குமரி மாவட்டத்தில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையால் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது – எஸ்.பி. அன்ஷூல் நாகர் தகவல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையால் மாவட்டத்தில் தற்போது குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷூல் நாகா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 13 ஆயிரத்து 356 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில், கடந்த 2 மாதங்களில் மட்டும் புதிதாக 180 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமுள்ள கேமராக்களில் 8 ஆயிரம் கேமராக்கள் காவல் துறையால் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதியுள்ள 5 ஆயிரத்து356 கேமராக்கள் தனியாா் உதவியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சோதனைச் சாவடிகள் ….

மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தில் 50 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 200 கேமராக்கள் மூலம் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள், மாவட்டத்தை விட்டு வெளியேறும் வாகனங்கள் மற்றும் கேரள, தமிழ்நாடு எல்லைகளைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் இந்த சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குற்றங்கள் குறைவு…

கடந்த ஆண்டு (2025) அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடும்போது, கொலை வழக்குகள் 4 இல் இருந்து 3 ஆகவும், காயம் ஏற்படுத்திய வழக்குகள் 72 லிருந்து 54 ஆகவும், உயிரிழப்பு விபத்துகள் 31லிருந்து 18 ஆகக் குறைந்துள்ளன. 5 முக்கிய திருட்டு வழக்குகளில் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரணியல் சந்திப்பு அருகே நிறுவப்பட்ட ஏ.ஐ. கண்காணிப்பு கேமரா மூலம் 2 மாதங்களில் 23 ஆயிரம் போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இம் மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றமில்லா பாதுகாப்பான குமரியை உருவாக்க மாவட்ட காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version